தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசாங்கம் நடக்கிறதா அல்லது சர்க்கஸ் நடக்கிறதா? மகாராஷ்டிராவை விமர்சித்த ராஜ்நாத் சிங்

மும்பை: மகாராஷ்டிராவில் அரசாங்கம் நடக்கிறதா அல்லது சர்க்கஸ் நடக்கிறதா என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Defence Minister Rajnath Singh Rajnath Singh news Shiv Sena slamming Shiv Sena சிவ சேனா ராஜ்நாத் சிங் மகாராஷ்டிரா மகாராஷ்டிரா ஆட்சி சர்க்கஸ்
மகாராஷ்டிரா ஆட்சிகுறித்து விமர்சித்த ராஜ்நாத் சிங்

By

Published : Jun 9, 2020, 2:54 AM IST

கரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமாகிக்கொண்டே வருகிறது. முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கரோனா பரவல் அதிகமானதுக்கு மகாராஷ்டிரா அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியே காரணம் என்று விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், தொற்றுப்பரவலை கையாள்வது குறித்து அம்மாநில அரசை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”மகாராஷ்டிராவில் அரசாங்கம் நடப்பதுபோல் தெரியவில்லை மாறாக சர்க்கஸ் நடப்பதுபோல் தெரிகிறது. மகாராஷ்டிரா கூட்டணி அரசில் சரத்பவார் போன்ற வலிமையான தலைவர் இருந்தும் இவ்வாறு நடப்பது துரதிர்ஷ்டவசமானது.

கரோனா தொற்று பாதித்த ஒருவர் 16 மணிநேரம் ஆம்புலன்ஸில் வைக்கப்படிருப்பதைப் பார்க்கும்போது மகாராஷ்டிராவில் அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அர்ப்பணிப்புகளைவிட அரசியல் கூட்டணிக்கு முக்கியத்துவம் தந்ததன் விளைவால்தான் மகாராஷ்டிராவின் நிலை மோசமாக உள்ளது. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல உதவிய நடிகர் சோனுவை பாராட்டாமல் மாநில அரசு விமர்சித்துள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details