நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே ஏப்ரல் 11ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள மக்கள் சொந்த ஊர் சென்ற வண்ணம் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் போது, கீழ்கண்ட பன்னிரெண்டு ஆவணங்களில் ஏதனும் ஒன்றை பூத் சிலிப்போடு கொண்டு செல்லலாம். ஆவணங்கள் கீழ்வருமாறு:
- வாக்காளர் அடையாள அட்டை
- கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
- ஒட்டுநர் உரிமம்
- மத்திய மாநில அரசு ஊழியர்களின் பணிக்கான அடையாள அட்டை
- நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு)
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடையாள அட்டை
- புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம்
- தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் கொடுக்கப்பட்ட பொலிவு அட்டை
- இந்திய அரசால் கொடுக்கப்பட்ட சுகாதார காப்பீட்டு பொலிவு அட்டை
- நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடையாள அட்டை
- புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய அட்டை
- ஆதார் அட்டை
பூத் சிலிப்போடு இவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டும்.