தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா சிகிச்சை பெற்ற பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற மருத்துவர் கைது - பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மருத்துவர் கைது

அலிகார்: கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து மீண்டு வந்த 25 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அலிகார் தீன் தயாள் மருத்துவமனையில் அரசு மருத்துவர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

doctor-held-for-rape-attempt-on-corona-patient-in-uttar-pradesh
doctor-held-for-rape-attempt-on-corona-patient-in-uttar-pradesh

By

Published : Jul 23, 2020, 3:30 PM IST

கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து 25 வயது பெண் மீண்டு வந்துள்ளார். இந்நிலையில், அலிகார் தீன் தயாள் மருத்துவமனையின் அரசு மருத்துவர் துஃபைல் அகமது(30) அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட அப்பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அப்புகாரில் "செவ்வாய்க்கிழமை இரவு துஃபைல் மகளிர் வார்டுக்கு வந்தார், தன்னை பரிசோதிக்கும் சாக்கில் தனது அங்கங்களைத் தொட்டார். புதன்கிழமை காலை, மருத்துவர் மீண்டும் வந்து பார்வையிட்டார், அதே செயலை மீண்டும் செய்தார்” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து,சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்த பின்னர், மருத்துவர் பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை அணியாமல் தனிமை வார்டுக்கு சென்றார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

பின்னர், குவார்சி காவல் நிலையத்தில் ஐபிசி 376 (2) டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிவில் லைன்ஸ் காவல் நிலைய வட்ட அலுவலர் அனில் சமனியா தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details