வேலைவாய்ப்பு முழுவதும் பிராந்திய மக்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்னும் கூக்குரல் பிராந்திய வெறி மீண்டும் தலைதுாக்குவதற்கான அறிகுறி மகாராஷ்ரத்தில் பதவியேற்றுள்ள புதிய அரசு வேலைவாய்ப்பில் 80% பிராந்திய மக்களுக்கே ஒதுக்கப்படும் என உறுதியாக கூறியுள்ளது. “ஆந்திர பிரதேச தொழிற்கூடங்களில் பிராந்திய மக்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம் 2019” சில மாதங்களுக்கு முன் ஆந்திர அரசு இயற்றியது. இச்சட்டத்தின் நோக்கம் பிராந்திய மக்களுக்கு வேலை வாய்ப்பில் 75% ஒதுக்கீடு செய்வதாகும். ஆந்திராவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் இச்சட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தவேண்டும். உள்ளுர் மக்கள் போதுமான திறனற்றவர்களாக இருப்பின் தொழிற்சாலைகளே அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து வேலையில் அமர்த்திக் கொள்ளவேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் ஆந்திராவில் புதிய முதலீடுகள் மூலம் புதியதொழிற்சாலைகள் தொடங்குவது தடைபடுவதன் மூலம் வேலைவாய்ப்பு இழப்பும் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலையும் ஏற்படும் பிரக்சிட் (BREXIT) அமல்படுத்தியதன் மூலம் பிரிட்டனில் ஏற்பட்ட நிலையே இங்கும் ஏற்படும் இத்தகைய அரசியல் நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் காலப்போக்கில் வளர்ச்சியடையாத BIMRU மாநிலங்களுக்கிடையே வருமானத்திலும் வேலைவாய்ப்புகளிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பது நிச்சயம். இந்தியாவின் 20 விழுக்காடு அதாவது 100 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் அதனால் பிராந்திய மக்கள் வேலைத்திறன் குறைபாடு உள்ளவர்களாக இருந்தால் தொழிற்சாலைகள் இலாபத்தை குறைவாகவே பெறக்கூடும்.
உண்மையிலேயே 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு மாநில நிவாரணத் தொகையை பெற வேண்டுமானால் தொழிற்சாலைகள் 80 விழுக்காடு பிராந்திய மக்களை வேலையில் அமர்த்த நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள். ஆனால் போதுமான வேலைத்திறன் பெற்றவர்கள் கிடைக்காததால் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதுபோலவே 2016 ஆம் ஆண்டு கர்நாடக அரசு 100 விழுக்காடு வேலைவாய்ப்பு பிராந்திய மக்களுக்கே என்று அறிவித்த நடவடிக்கை சட்டத்துறையால் அரசியலமைப்பிற்கு முரணானது என மறுத்தாணையிடப்பட்டது.
மத்திய பிரதேச அரசும் இதுபோன்றதொரு சட்டம் இயற்ற யோசித்து வருகிறது. அடுத்து கோவா மற்றும் ஒடிசா அரசுகளும் இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம். மகாராஷ்டிராவும் அசாமும் இத்தகைய கோரிக்கைகளை முன்னிறுத்தி நடந்த போராட்டங்களை கடந்த 10 ஆண்டுகளாவே சந்தித்து வருகின்றன. பல மாநிலங்களும் இத்தகைய நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்தபிறகு இடம்பெயர்ந்து வேலைசெய்யக்கூடியவர்களால் ஏற்பட்ட திசைமாற்றமானது பொருளாதாரத்தில் ஒரு தடம் பதித்து சென்றது. இதன் விளைவாக வட இந்தியாவிலிருந்து தென்இந்தியா நோக்கி வேலைதேடி அதிகளவில் மக்கள் வரத்தொடங்கியுள்ளனர். இத்தகைய வட இந்தியர்கள் வேலைதேடி தென்னிந்தியா நோக்கி வருவதை தென்னிந்திய மக்கள் கடுமையாக இல்லாது போனாலும் ஓரளவு எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
இத்தகைய சிந்தனையோடு அடுத்து வரக்கூடிய மாநிலம் கர்நாடகம், தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை பிராந்திய மக்களைக்கொண்டு நிரப்பும் பொருட்டு பிராந்திய மக்களின் வேலைத்திறனை உயர்த்தும் பயிற்சியளித்து வருகிறது. இத்தகைய செயல்பாட்டை கர்நாடக முதல்வர் தனது இந்திய விடுதலை நாள் விழா உறையில் கூறியிருந்தார்.
போலி நாட்டுப்பற்று அரசியல் அரிதாகவே புள்ளி விவரங்களை சார்ந்து இருக்கிறது. ஆனால் தற்போதைய விடயத்தில் போதுமான ஆதாரங்களைக் கொண்டு இந்தியாவில் மாறிவரும் மக்களின் இடப்பெயர்ச்சியை நிரூபிக்க விரும்போருக்கு சென்ற மாதம் வரை போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றே கூறலாம். 2000 ஆண்டுகளில் இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சி பெருமளவு உயர்ந்திருந்தபோதிலும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வேலை தேடி இடம் பெயர்தல் அந்தந்த மாநிலத்திற்குள்ளேயே நடைபெற்றுள்ளது. பிராந்தியவெறிக்கு எதிரான பாதுகாப்பு நமது அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் பேணி பாதுகாக்கப்படுகிறது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரும் புள்ளி விவரங்கள் இடப் பெயர்ச்சி விடயத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை தெளிவாக விளக்குகிறது. மத்திய இந்தி பேசும் மாநில மக்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு கடற்கரை நகரங்களை நோக்கி பெருமளவில் நகர்வதோடல்லாமல் புதிய எழுச்சி பெறும் தென்மாநிலங்களை நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளனர். வேலை வாய்ப்பை மட்டுமல்லாது சிறந்த கல்வி கற்கும் வாய்ப்புகளையும் தேடி இந்தியர்கள் மாநில எல்லைகளை கடக்கத் தொடங்கியுள்ளனர். இத்தகைய புதிய வழித்தடங்களில் இடம் மாறும் இந்தியர்களின் எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் பத்தில் ஒன்றாகவே உள்ளது. அதாவது சுமார் 10 விழுக்காடு மக்களே வேலைதேடி மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து செல்கின்றனர். பிராந்திய மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கோட்பாட்டை கடைப்பிடிக்கும் மத்திய பிரதேசத்தில் 5 விழுக்காடு மக்களே இடம் பெயர்ந்து உள்ளனர்.
மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்ச்சி:
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திரமான இயக்கத்திற்கு உத்தரவாதம் அளிப்பதன்மூலம் வேலைவாய்ப்பிற்கும் உத்தரவாதம் அளித்துள்ளது. பிரிவு 19-இன் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவர உரிமை அளித்துள்ளது. பிரிவு 16-படி எந்த ஒரு குடிமகனும் பிறந்த இடத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பில் சாதகமாகவோ, பாதகமாகவோ நடத்தப்படக்கூடாது என்ற உத்தரவாதம் அளித்துள்ளது. பிரிவு 15 பிறப்பிடத்தின் அடிப்படையில் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு எதிராக பாதுகாப்பளிக்கிறது. அதுபோலவே பிரிவு-14 இன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் அவர்கள் இந்தியாவின் எந்த பகுதியில் பிறந்திருந்தாலும் மேற்கூறிய ஒரு சில அரவியலமைப்பின் பிரிவுகளின் படி 2014-ஆம் ஆண்டு நடந்த சாரு குரானா என்பவரின் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் எந்த ஒரு குடிமகனின் உரிமையும் பிறந்த இடத்தின் அடிப்படையில் மறுக்கப்படக்கூடாது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. சாரு குரானா என்ற ஒப்பனைக் கலைஞர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மகாராஷ்டிரத்தில் வசிக்கவில்லை என்ற தொழிற்சங்க விதிகளை காரணம்காட்டி தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராகும் உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. சமீபத்தில் ஆந்திர அரசால் இயற்றப்பட்ட சட்டமும் கூட அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் எதிர்க்கலாம் என்பது மட்டுமல்ல கட்டாயம் எதிர்க்கவேண்டும் என்பதே சரியாகும்.
அரசியலைப்பு பாதுகாப்பு ஒருபுறம் இருக்க மாநிலங்களுக்கிடையே நடைபெறும் இடம்பெயர்வோர் எண்ணிக்கையின் அடிப்படையிலும் பிராந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பில் வழங்கப்படும் முன்னுரிமை சட்டத்தை எதிர்க்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில்லா இடப்பெயர்ச்சி வழக்கமாக குறைத்து மதிப்பிடப்படுகிறது ஏனெனில் அத்தகை மதிப்பீடுகள் குறைந்த கால இடப்பெயர்ச்சிகளையும் வட்டவடிவ இடப்பெயர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் ஒப்பீட்டு விகிதாச்சாரங்கள் மூலம் அனுமானங்களை உருவாக்க முடியும்.
வடக்கு – தெற்கு இடைவழி:
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வடக்கு – தெற்கு இடைவழி உருவாகி இருப்பது தெளிவு. ஒருபுறம் உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்க மாநிலங்கள் அடங்கிய ஒரு கூட்டமைப்பாகவும் மறுபுறம் கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஒரு கூட்டமைப்பாகவும் எடுத்துக் கொண்டால் 85% இடப்பெயர்ச்சி தெற்கு நோக்கியே நகர்ந்துள்ளது. 2011 முதல் இந்த வடக்கு-தெற்கு இடைவழி வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த வளர்ச்சியை 2021 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு உறுதி செய்யும்.
2001-க்கும் 2011-க்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்ச்சி 11.6 மில்லியனிலிருந்து 13 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. இதில் நகர்ப்புற வேலை தேடுவோரின் இப்பெயர்ச்சியானது 8% அளவிலேயே இருந்தபோதிலும் ஒரு சில மாநிலங்களில் இந்த இடப்பெயர்ச்சி சற்று கூடுதலாகவே உள்ளது.
நேஷ்னல் சேம்பிள் சர்வே ஆபிஸ் (NSSO) வேலைவாய்ப்பு சர்வே படி 45 ஆண்டுகளில் இல்லாத உயர் அளவிலான 6.1% வேலை இல்லா திண்டாட்டம் 2017-18 இல் நிலவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதி செய்யப்படாத சர்வே நிலவரப்படி 2017-2018 ஆம் ஆண்டு 11 மாநிலங்கள் அதாவது 1/3 இந்திய மாநிலங்களில் வேலைவாய்ப்பு இன்மை தேசிய அளவை விட கூடுதலாகவே இருந்துள்ளது.