தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களவையின் மூன்றாவது பெரிய கட்சி திமுக - மக்களவை தேர்தல்

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 23 தொகுதிகளையும் கைப்பற்றி, மக்களவையின் மூன்றாவது பெரும் கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.

dmk

By

Published : May 24, 2019, 11:30 AM IST

2019 மக்களவைத் தேர்தலில் 302 தொகுதிகளைக் கைப்பற்றி அசுரபலத்துடன் பாஜக மீண்டும் தன் ஆட்சி அமைக்கவுள்ளது.

அதேவேளையில், காங்கிரஸ் கட்சி வெறும் 51 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி படுதோல்வியடைந்துள்ளது. அக்கட்சியின் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 90 தொகுதிகளை வென்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் திமுக.

தமிழ்நாட்டில் போட்டியிட்ட 23 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸை அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுகவைத் தொடர்ந்து தலா 22 தொகுதிகளுடன் மேற்கு வங்கத்தின் திருணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.

இதேபோன்று, 2014 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதிகளிலும் கூட்டணியின்றி போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளை கைப்பற்றி மூன்றாவது கட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details