தண்ணீர் பஞ்சம், வறட்சியில் சென்னை மாநகரம் சிக்கி தவிர்ப்பதற்கு மோசமான நிர்வாகமும், ஊழல் அரசியலுமே காரணம் என்று தமிழ்நாடு அரசை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக சாடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார். மேலும் தமிழக மக்கள் சுயநலவாதிகள், கோழைத்தனமானவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் - kiranbedi
புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த வருகின்றனர். இந்நிலையில், கிரண்பேடியின் இந்த கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் நேற்று கண்டனம் தெரிவித்தார். மேலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் ஆளுநர் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்திய கிரண்பேடி, புதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தி திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.