தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் நேரடி ஆட்சி; புதுச்சேரியில் மறைமுக ஆட்சி: மு.க.ஸ்டாலின்! - புதுச்சேரியில் ஸ்டாலின் பரப்புரை

புதுச்சேரி: தமிழ்நாட்டில் நேரடியாகவும், புதுச்சேரியில் மறைமுகமாகவும் மத்திய அரசு ஆட்சி செய்து வருவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

By

Published : Oct 17, 2019, 10:47 PM IST

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரெயின்போ நகர் சந்திப்பு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் சாதாரண முதலமைச்சரே அல்ல. மாநில உரிமை பறிக்கப்பட்டாலும் தட்டிக் கேட்காமல் இருக்கும் அடிமை முதலமைச்சர். தமிழ்நாடு ஆளுநர் செய்யும் அராஜகத்தை தட்டிக்கேட்க தைரியமில்லாமல் இருக்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் புரட்சிகரமாக முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி நேரடியாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. புதுச்சேரியில் மறைமுகமாக ஆளுநர் மூலம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் முதலமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கும் நலத்திட்டங்களை கிரண்பேடி தடுத்து வருகிறார். இலவச அரிசி மற்றும் வேஷ்டி சேலைகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காரணம் ஆளுநர் கிரண்பேடி மட்டுமே.

என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஒரு துரோகி. இதை நான் சொல்லவில்லை மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா சொல்லியதுதான். ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர். ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு புதுச்சேரி முதலமைச்சர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வைத்திலிங்கத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்கலாமே:அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு செலவு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details