பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘பிஎம் நரேந்திர மோடி’. சந்தீப் சிங்க் தயாரிப்பில் உருவாகிருக்கும் இந்த படத்தை ஒமங் குமார் இயக்கியுள்ளார். மோடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மோடியின் வாழ்க்கையை சித்தரித்து வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் மூலம், தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் மத்தியில் அக்கட்சி ஆதரவு கோரும் என்பதாலும், திரைப்படம் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும் திமுக, தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.