மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. இதில் ஐந்து கட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பரப்புரை ஒன்றில் மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், "ராணுவ வீரர்களை அவமதிக்கும் திக்விஜய சிங்கின் பெயரை உச்சரித்ததால் பாவங்களைக் கழுவிக் கொள்ள குளிக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
பாவங்களைக் கழுவ சிவ்ராஜ் சிங் குளிப்பாரோ? திக்விஜய சிங் கேள்வி - பிரக்யா சிங் தாகூர்
போபால்: பிரக்யா சிங் தாகூரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பின் மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது பாவங்களைக் கழுவிக் கொள்ள குளிப்பாரோ? என காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
திக்விஜய சிங்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய சிங், "மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தாகூரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பின் மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது பாவங்களைக் கழுவிக் கொள்ள குளிப்பாரோ?" என கேள்வி எழுப்பியுள்ளார்.