தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுதந்திர தினம், குடியரசு தினம்: கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசங்கள்

சென்னை: சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசங்கள் குறித்து காணலாம்.

kodi
kodi

By

Published : Jan 25, 2020, 5:40 PM IST

நாடு முழுவதும் 71ஆவது குடியரசு தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள் கம்பத்தில் இருக்கும் தேசியக் கொடியை பறக்கவிடுவர். சுதந்திர தினத்திற்கு அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றுவர்.

இந்நிலையில், சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள மூன்று வித்தியாசங்கள் பின்வருமாறு:

முதல் வித்தியாசம்

சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும். அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும்விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வு 'கொடியேற்றம்' அதாவது Flag hosting என்றழைக்கப்படுகிறது.

குடியரசு தினத்தன்று கொடியானது கம்பத்தின் உச்சியிலேயே கட்டப்பட்டிருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு, அதாவது கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும். இதை, கொடி பறக்கவிடுதல் அதாவது flag unfurling என்பார்கள்.

இரண்டாவது வித்தியாசம்

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர்தான் நாட்டில் முதல் மனிதராக அதாவது political head எனக் கருதப்பட்டார். குடியரசுத் தலைவர் அப்போது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர் கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவர் மாலையில் வானொலி, தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்.

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், அரசியல் சட்டத்தின் தலைவர், பாதுகாவலர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் கொடியை பறக்கவிடுவார்.

மூன்றாவது வித்தியாசம்

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்படுகிறது. குடியரசு தினத்தன்று டெல்லி ராஜ் பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details