தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிற மாநிலங்களை விட காஷ்மீர் வளர்ச்சியில்லாத மாநிலமா?

இந்தியாவின் பிற மாநிலங்களை விட ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே திகழ்கிறது. ஆனால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு ஏன் நீக்கியது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

By

Published : Aug 9, 2019, 8:29 AM IST

jammu

ஜம்மு- காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு - காஷ்மீரை இரு யுனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு காரணமாக, காஷ்மீர் மக்கள்ஏழ்மையாக உள்ளதாகவும் போதிய மருத்துவ வசதி இல்லை என்பதாகவும்உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மேலும், சிறப்பு அந்தஸ்து இருப்பதால் தான் காஷ்மீருக்கு இந்தியாவின் நலத்திட்டங்கள் எதுவும் சென்று சேரவில்லை. எனவே காஷ்மீர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவே மத்திய அரசு 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதாகக் கூறினார். உண்மையிலே ஜம்மு - காஷ்மீர், அமித்ஷா கூறியது போல் உள்ளதா என்பதை விரிவாகக் காண்போம்...

அமித்ஷா

குழந்தை இறப்பு விகிதம்:

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை அதன் குழந்தை இறப்பு விகிதத்தின் அளவை வைத்தே தெரிந்து கொள்ளலாம். மேலும், அம்மாநிலத்தின் மருத்துவத்துறையின் செயல்பாட்டின் தீவிரத்தையும் புரிந்து கொள்ள முடியும். இந்த விகிதம் பிறக்கும் 1000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்பதைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 2016ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஜம்மு- காஷ்மீரில் 1000 குழந்தைகளில் 24 குழந்தைகள் இறப்பைச் சந்திக்கின்றன. இதில், காஷ்மீர் இந்திய அளவில் 10வது இடத்தை பிடித்துள்ளது. கோவா மாநிலம்(1000க்கு 8 குழந்தைகள்) முதலிடத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வரும் குஜராத் மாநிலத்திலே பிறக்கும் 1000 குழந்தைகளில் 30 குழந்தைகள் இறப்பைச் சந்திக்கின்றன.

தமிழ்நாடு- 1000க்கு 17 குழந்தைகள் இறக்கின்றன

குழந்தை

மனிதனின் வாழ்நாள் ஆயுட்காலம்:

2016ஆம் ஆண்டு வரையிலான கணக்கீட்டின்படி, காஷ்மீரில் வாழும் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 72.6 வயதாக (இந்திய அளவில் மூன்றாம் இடம்) உள்ளது. கேரள மாநிலம்(74.9 வயது) முதலிடத்தில் உள்ளது. மிகவும் குறைவான சராசரியைக் கொண்ட மாநிலமாக அஸ்ஸாம் மாநிலம்(63.9 வயது) உள்ளது.

தமிழ்நாடு- தனிநபர் ஆயுட்காலம் 70.6 வயது

தனிநபர் ஆயுட்காலம்

அரசு மருத்துவர்களின் அளவு:

ஐநா-வின் உலக சுகாதார அமைப்பானது ஒரு நாட்டில் 1000 மக்களுக்கு 1 மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதன்படி, காஷ்மீரில் 3060 மக்களுக்கு ஒரு அரசு மருத்துவர் உள்ளனர். ஆனால், பிகாரில் 28,391 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் உள்ளது.

தமிழ்நாடு- 9544 மக்களுக்கு 1 அரசு மருத்துவர்

அரசு மருத்துவர்கள்

கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பு விகிதம்:

2015-2016ஆம் ஆண்டுகளின் கணக்குப்படி, காஷ்மீர் மாநிலத்தின் கிராமப்புறங்களில் 1000 மக்களுக்கு 83 பேர் வேலையில்லாமல் உள்ளனர். இருப்பதிலே மிகவும் குறைவான விகிதத்தைத் திரிபுரா மாநிலம்(1000க்கு 203 பேர்) கொண்டுள்ளது.

தமிழ்நாடு- 1000க்கு 45 பேர்

வறுமை விகிதம்:

காஷ்மீரின் வறுமை விகிதம் 10.35% ஆக உள்ளது. இந்திய அளவில் 8ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கோவா (5.09%) உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் (39.93%) கடைசி இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு- 11.28% வறுமை விகிதம்

வறுமை நிலை

மாநில மொத்த வருமானத்தில் தனி மனிதனின் பங்களிப்பு:

2016-2017ஆம் ஆண்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, காஷ்மீரில் தனி நபர் வருமானம் ரூ.62,415 ஆக உள்ளது. கோவா மாநிலமே ( ரூ.3,08,823)இதிலும் முதலிடத்தில் உள்ளது. பிகார் மாநிலம் கடைசியாக (ரூ.25,950) உள்ளது.

தமிழ்நாடு- ரூ.1,86,125

மனித வள மேம்பாட்டுக் குறியீடு:

நீண்ட நாள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வு, எளிதில் தகவல்கள் கிடைப்பது, வாழ்வதற்கான வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மனித வள மேம்பாட்டுக் குறியீடு கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில், 2017ஆம் ஆண்டில் காஷ்மீரின் மனித வள மேம்பாட்டுக் குறியீடு 0.68 ஆக உள்ளது. இது குஜராத் மாநிலத்தை விட அதிகம். கேரளாவுக்கு 0.77 உள்ளது. பிகார் 0.57 அளவுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

தமிழ்நாடு- 0.70

மனித வள மேம்பாட்டுக் குறியீடு

சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு உள்துறை அமைச்சர் கூறிய எந்த காரணங்களும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துடன் ஒத்துப் போகவில்லை. அதற்கு மாறாக நீண்ட காலமாக பாஜக ஆட்சி செய்த மாநிலங்களே மிகவும் பின்தங்கியுள்ளன. இந்தியாவின் பிற மாநிலங்களை விட ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே திகழ்கிறது. ஆனால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு ஏன் நீக்கியது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details