மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகே ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று அங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் நெருப்பில் சிக்கி உயிரிழந்தனர், 58 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
துலே தீ விபத்து; தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு! - வழக்கு
மும்பை: துலே அருகேயுள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
fire accident
இந்நிலையில் தீ விபத்து நேர்ந்த ரசாயன தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.