தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகள் மசோதா தாக்கல் திமுக எம்பி கண்டனம் - மக்களவை உறுப்பினர் தனுஷ் எம் குமார்

டெல்லி: விவசாயிகள் எதிர்ப்பார்ப்பது ஈரட்டிப்பு லாபம் அல்ல என்றும், மாறாக அவர்கள் விலைவிக்கும் பொருள்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை தான் கேட்கிறார்கள் என்று திமுக மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர் தனுஷ் எம் குமார்
மக்களவை உறுப்பினர் தனுஷ் எம் குமார்

By

Published : Sep 18, 2020, 2:17 AM IST

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், மத்தியில் ஆளும் பாஜக சார்பில் விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மக்களவை தொகுதி திமுக எம்.பி. தனுஷ் எம்.குமார் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், " இந்த மசோதா விவசாயிகள் தங்களது விலை பொருள்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று நேரடியாக விற்பனை செய்ய வழிவகுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதைவிட மகத்தான திட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பே உழவர் சந்தை என்ற திட்டம் தமிழ்நாட்டில் 1999ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டுள்ளது.

மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார்

இந்த மசோதா சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனில் சிறிதளவும் அக்கறை கொள்ளவில்லை. இந்த மசோதா நடைமுறை சாத்தியமற்றது. விவசாய கொள்முதலில் நடைபெறும் கமிஷன் குளறுபடிகளுக்கு தீர்வுகாணக்கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த பிரச்னை மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மசோதா இணையவழி விற்பனைக்கு வழிவகை செய்வதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் உள்ள 86.2 விழுக்காடு விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருப்பதால், அவர்கள் இணையத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. விற்பனைக்கான தொகை மூன்று நாள்களில் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் கரும்பு விவசாயிகளுக்கு அவர்களுக்கான தொகை இன்னும் சென்றடைவில்லை.

இந்த மசோதாவில், விலை பொருள் விற்பனையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் விவசாயிகள் மாவட்ட நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள விவசாயிகள் எவ்வாறு நீதிமன்றத்தை நாடமுடியும்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இதுவரை விவசாயிகளுக்கு கிடைத்துவந்த பொருள்களின் குறைந்தப்பட்ச ஆதார விலையை நீர்த்துபோக செய்யும். இது பெரிய விவசாயிகளுக்கும், பெரியளவில் கொள்முதல் செய்யும் பெருமுதலாளிகளுக்கும் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

விவசாயிகள் எதிர்ப்பார்ப்பது ஈரட்டிப்பு லாபம் அல்ல. மாறாக அவர்கள் விலைவிக்கும் பொருள்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை தான். இதுபோன்ற மசோதாக்கள் நிறைவேற்றும் முன் நாட்டில் பொரும்பான்மையாக உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாவை எதிர்க்கிறேன்" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details