தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாசிவராத்திரி: உலகம் முழுவதுமிருந்து சிவன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் - மகா சிவராத்திரி கொண்டாட்டம்

டெல்லி: மகா சிவராத்திரி தினமான இன்று பிரார்த்தனை செய்வதற்கு, நாட்டின் பல பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி

By

Published : Feb 21, 2020, 1:13 PM IST

மகா சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் கண் விழித்து சிவனுக்குப் பிரார்த்தனை செய்தால் பல நன்மைகள் உருவாகும் என்ற நம்பிக்கை நீண்ட காலங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிவாலயங்கள் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மும்பையில் உள்ள பாபுல்நாத் (Babulnath) கோயில், டெல்லியின் சாந்தினி சஹாக்கில் உள்ள ஸ்ரீ கெளரி சங்கர் (Shri Gauri Shankar) கோயில், அமிர்தசரஸில் உள்ள 'சிவாலா பாக் பயான்' (Shivala Bagh Bhaiyan) ஆகிய கோயில்களில் பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும், கர்நாடகாவில் கலபுராகியில் உள்ள பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 25 அடி உயரமுள்ள 'சிவலிங்கத்தை', சுமார் 300 கிலோ பட்டாணி போன்ற விளைபொருட்களால் அலங்கரித்துள்ளனர். இதுமட்டுமின்றி ஒடிசாவில், மகா சிவராத்திரி தினத்தன்று, ஒரு பென்சில் முள்ளில் சிவலிங்கத்தின் மாதிரியை உருவாக்கி பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார்.

மகா சிவராத்திரி

இந்த சிறப்புமிக்க மகா சிவராத்திரி விழாவையொட்டி அனைத்து சிவலாயங்களிலும், இன்று மாலை சிறப்பு வழிபாடுகள் தொடங்கி நாளை காலை வரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க:50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த பெண் ஐ.டி. ஊழியர்: குவியும் புகார்

ABOUT THE AUTHOR

...view details