தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா அச்சுறுத்தல்: எதிரியாக மாறிய கைகள்

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களை கீழே காண்போம்.

hand
hand

By

Published : Apr 25, 2020, 1:33 PM IST

நம் கைகளே நம் எதிரிகளாக மாறினால் எப்படி இருக்கும்? கரோனா வைரஸ் நோய் நம் மனதில் அப்படியொரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் தும்மும்போது வெளியாகும் வைரஸின் இனப்பெருக்க செல்கள் மூலம் நோய் பரவும்.

நம்மை சுற்றியிருக்கும் பொருள்களில் வைரஸ் பரவல் இருந்து அதை நாம் தொட்டால், நம் கைகள் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. கைகளை சோப் மூலம் சுத்தப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முகத்தில் கை படாதவாறு பார்த்துக்கொள்வது முக்கியம். ஆனால், அதனை செயல்படுத்துவது மிகக் கடினம்.

நமக்கே தெரியாமல், கைகளையும் மூக்கையும் தொட்டுவிடுகிறோம். ஒரு மணி நேரத்திற்கு 23 முறை நாம் முகத்தை தொடுகிறோம் என ஆராய்ச்சி கூறுகிறது. அதனை எப்படி கட்டுப்படுத்துவது?

  • நம் முகத்தை எப்படி, எப்போது தொடுகிறோம் என்பதை புரிந்துகொள்வது முக்கியமாகிறது. மற்றவர்களை கவனிப்பது மூலம் நாம் இதனை அறிந்து கொள்ளலாம். சலிப்பு ஏற்படும்போதும், ஆழமான சிந்தனையில் இருக்கும்போதும் சிலர் கன்னத்தில் கை வைப்பதுண்டு. சோகத்தில் இருக்கும்போது சிலர் நெற்றியை தேய்ப்பதுண்டு. யோசிக்கும்போது சிலர் நகத்தை கடிப்பதுண்டு. கவனக்குறைவாக இருக்கும்போது, நாமும் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த பண்புகளை மாற்றி கொண்டால் இதற்கான தீர்வுகளை நாம் கண்டுகொண்டுவிடலாம்.
  • கைகளை சோப் மூலம் நன்கு கழுவிய பிறகு, லோசன் அல்லது வாசனை திரவியத்தை பூச வேண்டும். கைகளை முகத்தின் அருகே எடுத்துச் செல்லும்போது, அந்த வாசனை மூலம் நாம் அதனை தடுத்துவிடலாம்.
  • வெளியே செல்லும்போது மூக்கையும் வாயையும் முகக்கவசத்தை கொண்டு மூடிக்கொள்வதன் மூலம் முகத்தில் கை படுவதை தவிர்க்கலாம்.
  • இவற்றை கடைப்பிடிக்கவில்லை என்றாலும் Stress Ball, FitJet spinner, rubber band ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் கை படாமல் தவிர்க்கலாம்.
  • மேசையின் முன்பு உட்காரும்போது கைகளை அதன் மீது வைக்க வேண்டாம். அதற்கு பதில், மடியின் மீது அல்லது தொடையின் மீது வைக்கவும்.
  • கை, மூக்கு, வாய் ஆகியவற்றை துடைப்பதற்காக tissue paper அல்லது napkinகளை பயன்படுத்தலாம்.
  • எவ்வளவு கவனமாக இருந்தாலும் சரி, எவ்வளவு கடினமாக முயன்றாலும் சரி முகத்தினை தொடாமல் இருப்பது கடினம். மற்றவர்களிடமிருந்து தள்ளி நிற்பதும் கைகளை தொடர்ந்து சுத்தப்படுத்துவதும் பெரிய பிரச்னையாக இருக்காது. எனவே, கைகளை சுத்தப்படுத்துவதும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நீங்கள் கான்டாக்ட் லென்ஸை பயன்படுத்துகிறீர்களா? உங்கள் கவனத்திற்கு

ABOUT THE AUTHOR

...view details