தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மகாராஷ்டிராவை கடன் நிறைந்த மாநிலமாக ஆக்கியவர் தேவேந்திர பட்னாவிஸ்'

மும்பை: மகாராஷ்டிராவை கடன் நிறைந்த மாநிலமாக மாற்றியவர் தேவேந்திர பட்னாவிஸ் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலமைப் பேச்சாளர் மாலிக் தெரிவித்துள்ளார்.

state minister Nawab Malik  NCP trashed BJP  தேசியவாத காங்கிரஸ் கட்சி  பட்னாவிஸ்  ncp spokesperson malik  Devendra Patnavis  தேவேந்திர பட்னாவிஸ்  நவாப் மாலிக்
மகாராஷ்டிராவை கடன் நிறைந்த மாநிலமாக ஆக்கியவர் தேவேந்திர பட்னாவிஸ்

By

Published : May 28, 2020, 9:29 AM IST

கடந்த சில நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பதில் பாஜக அக்கறை காட்டவில்லையென்றும் இந்த பெருந்தொற்றை திறம்பட கையாள விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

பட்னாவிஸின் கருத்தை விமர்சித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பேச்சாளர் மாலிக், மத்திய அரசிடமிருந்து கடன் பெறுவது எப்படி என்பது குறித்து பட்னாவிஸுடன் ஆலோசனை செய்ததாக கேலி செய்தார்.

மேலும், "பாஜகவால் மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. ஏனென்றால், காங்கிரஸ்- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. ஆனாலும், பாஜகவினர் புறம் பேசிக்கொண்டே மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனார். இருந்தாலும், அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசுக்கு தரவேண்டிய தொகையையே தந்துள்ளது. கூடுதலாக மகாராஷ்டிராவுக்கு எதுவும் செய்யவில்லை. தேவேந்திர பட்னாவிஸ் அரசியலில் தொடர்வதை விட்டுவிட்டு கடன் பெறுவது எப்படி என்று ஒரு ஆலோசனை மையத்தை அவர் தொடங்கலாம்.

அந்த வியாபாரத்தில் அவர் வெற்றி பெற்று விடுவார். ஏனென்றால் மகாராஷ்டிரா மாநிலத்தை கடன் நிறைந்த மாநிலமாக மாற்றியவர் அவரே. அவரைப் போன்ற ஆலோசகர்கள் எங்களுக்குத் தேவையில்லை" என்றார்.

இதையும் படிங்க:தனிமைப்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் - பினராயி அதிரடி

ABOUT THE AUTHOR

...view details