மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியானதிலிருந்து அங்கு அரசியல் குழப்பம் தீர்ந்தபாடில்லை. நேற்று வரை சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் வெளியான நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்: தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பு! - undefined
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் பதவியேற்றார்.
Devendra Fadnavis to take oath as Maharashtra Chief Minister again,NCP's Ajit Pawar to take oath as Deputy CM
துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் இருவருக்கும் ஆளுநர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Last Updated : Nov 23, 2019, 8:59 AM IST
TAGGED:
மகாராஷ்டிரா தேர்தல்