மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை.
இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, 56 இடங்களை வைத்துக்கொண்டு பாஜகவிடம் ஆட்சியில் சமபங்கு கோரிவருகிறது. ஆனால், முதலமைச்சர் பதவி குறித்து அமித் ஷாவிடம் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேசவில்லை என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தார்.