கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து மத்திய, மாநில அரசுகள் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்கள், பேருந்துகளை இயக்கிவருகிறது.
ஜம்மு - காஷ்மீர் தொழிலாளர்கள் 80 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு - Migrant Workers news
புதுச்சேரியில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 80 பேர் பேருந்து மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
80-migrant-workers-in-jammu-and-kashmir
அதன்படி, புதுச்சேரியில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 80 பேர் இன்று பி.ஆர்.டி.சி. அரசுப் பேருந்தில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கிருந்து, சிறப்பு ரயில் மூலம் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் ரயில்நிலையத்திற்குச் செல்ல உள்ளனர். அவர்களுக்கு தண்ணீர், பிரட், கிருமி நாசினி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அளிக்கப்பட்டன.
இதையும் படிங்க:நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் - நாராயணசாமி ஆவேசம்