தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீன இறக்குமதி எளிதில் தவிர்க்கக்கூடியது அல்ல - ஆர். காந்தி - இந்தியா சீனா எல்லை மோதல்

சீனாவை சார்ந்திருக்கும் நாடாக இந்தியா ஒரே இரவில் மாறிவிடவில்லை; அதேபோல், அந்த நிலையில் இருந்து மாறுவதும் உடனே நடந்துவிடக்கூடியது அல்ல என ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ராம சுப்ரமணியம் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆர். காந்தி
ஆர். காந்தி

By

Published : Sep 12, 2020, 7:51 PM IST

இமயமலையை ஒட்டிய கிழக்கு லடாக்கில் இந்திய – சீன ராணுவங்கள் போருக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக இந்திய – சீன வர்த்தகத்தின் மீது கரும் நிழல் படியத் தொடங்கியுள்ளது. அதோடு, சீனாவின் மலிவான பொருள்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதையும், சீன இறக்குதியை சார்ந்து இந்தியா இருப்பதையும் தவிர்க்க நரேந்திர மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும், சீன இறக்குமதியை பெருமளவில் குறைப்பது என்பது உடனடியாக நடக்கக் கூடியது அல்ல என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்திய – சீன (இறக்குமதி – ஏற்றுமதி சார்ந்த) பொருளாதார புள்ளி விவரங்களை பார்க்கும்போது, அது சீனாவுக்கு சாதகமாகவே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். 2018-19 நிதி ஆண்டில், ஹாங்காங் தவிர்த்த சீனாவுடனான இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 87 பில்லியன் அமெரிக்க டாலர்.

இதில், இந்திய இறக்குமதியின் மதிப்பு 70.30 பில்லியன் டாலர். அதேநேரத்தில், ஏற்றுமதியின் மதிப்பு 16.75 பில்லியன் டாலர். பற்றாக்குறையின் மதிப்பு 53.55 பில்லியன் டாலர். இந்தியா, சீன இறக்குமதியை பெருமளவில் சார்ந்து இருப்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இறக்குமதி மதிப்பில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

2013-14 முதல் 2017-18 வரை இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக இருந்த நாடு சீனா. 2018-19ல் அமெரிக்கா அந்த இடத்தை கைப்பற்றி உள்ளது.

“சீன இறக்குமதியை தவிர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில், சீன இறக்குதியை சார்ந்து இருக்கும் சூழல் ஓர் இரவில் ஏற்பட்டது அல்ல” என்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ராம சுப்ரமணியம் காந்தி.

“அதிக அளவில் சீனாவுக்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம். அதைவிட அதிக அளவில் நாம் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்றோம். அவ்வாறு இருக்க, எவ்வாறு அதை ஒரே இரவில் மாற்ற முடியும்” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஜூன் மாதம் மோதல் ஏற்படுவதற்கு முன்பே, மோடி அரசு இறக்குமதியை குறைக்கும் நோக்கில் தற்சார்பு இந்திய இயக்கத்தை கடந்த மே மாதம் தொடங்கியது.

சீனாவின் வூகானில் ஏற்பட்ட கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்ட நிலையில், அதை கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இருதரப்பு வர்த்தக உறவை கடுமையாக பாதிப்படையச் செய்தது.

இந்த மோதல் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னமும் இயல்பு நிலை திரும்பாததால், சீன இறக்குமதியை குறைப்பதற்கான - அதாவது சீன இறக்குமதியை சார்ந்திருப்பதை தவிர்ப்பதற்கான - அவசரத் தேவை அதிகரித்துள்ளது.

சீனாவுடனான பொருளாதார பற்றாக்குறை அதிக அளவில் உள்ளதால், இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்தியா இறக்குமதியை பெருமளவில் குறைக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

பொருளாதார பற்றாக்குறை அதிகமாக உள்ளது பற்றி இந்தியா, சீனாவிடம் பலமுறை முறையிட்டுள்ளது. அதாவது சீன இறக்குமதி அதிகமாகவும், சீனாவுக்கான ஏற்றுமதி குறைவாகவும் இருப்பதை இந்தியா தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது.

இன்னும் ஆழமாக பார்த்தோமானால், மூலப் பொருட்களையும், குறைந்த மதிப்புள்ள பொருள்களையும்தான் இந்தியா, சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், சீனாவோ, நேரிடையாக விற்பனை செய்யக் கூடிய முழுமை அடைந்த பொருட்களையும், தொலைபேசி கருவிகள், கணினிக்கான ஹார்வார்டு பொருட்கள், தகவல் தொழில்நுட்ப பொருட்கள், மொபைல் போன்கள், அவற்றுக்கான உதிரி பாகங்கள் என உயர் மதிப்புடைய பொருட்களையும் இறக்குமதி செய்து வருகிறது.

இந்தியாவின் மின்னணு பொருட்கள் இறக்குமதியில் 45 சதவீதம் சீன பொருட்களாகவே இருக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு இயந்திரங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதேபோல், 40 சதவீத ரசாயணப் பொருட்களை இந்தியா, சீனாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்கிறது.

இந்திய தொழிற்கூட்டப்பின் கூற்றுப்படி, வாகன உதிரி பாகங்கள் மற்றும் உரங்களில் 25 சதவீதமும், இந்திய மருந்து உற்பத்திக்கான மூலப் பொருட்களில் 70 சதவீதமும் சீனாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.

சீனாவை சார்ந்திருப்பதை குறைப்பதற்கான திட்டம் நீண்ட கால திட்டமாக இருக்க வேண்டும் என ஈ டிவி பாரத்திடம் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர், அப்போதுதான், நாம் நினைப்பது நடக்கும் என தெரிவித்துள்ளார்.

“இதற்கு நமது கொள்கையில் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இதனால், சாதகங்கள் ஏற்படுவதைப் போல பாதகங்களும் ஏற்படும். எனவே, இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நாம் இலக்கை எட்ட வேண்டும்” என்கிறார் ராம சுப்ரமணியம் காந்தி.

எனவே, இதனை நாம் உடனடியாக செய்துவிட முடியாது என்கிறார் அவர்.

பல்வேறு காரணங்கள் காரணமாக, 2019-20 நிதி ஆண்டில், சீன இறக்குதி குறைந்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக சர்வதேச அளவில் பொருட்களின் இறக்குமதி – ஏற்றுமதி சங்கிலித் தொடரில் ஏற்பட்ட பாதிப்பும் இதற்கு காரணம்.

2018-19 நிதி ஆண்டில் இந்திய சீன வர்த்தகம் 87.05 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது, 2019-20 நிதி ஆண்டில், 81.86 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. 5.19 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2018-19 நிதி ஆண்டில் 53.55 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்திய – சீன பொருளாதார பற்றாக்குறை, 2019-20 நிதி ஆண்டில் 48.66 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details