தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு வேறொரு நீதிபதிக்கு மாற்றம்!

டெல்லி: நிர்பயா வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்றி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nirbhaya

By

Published : Nov 25, 2019, 9:21 PM IST

கடந்த 2012ஆம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறுதியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். டெல்லி பட்டியாலா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரில் ஒருவர் 16 வயதிற்குற்பட்ட சிறுவன் என்பதால் மூன்றாண்டுகள் சீர்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்து விட்டபின் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. பின்னர், மூன்று பேர் திகார் சிறையிலும் ஒருவர் மண்டோலியில் உள்ள சிறைச்சாலையிலும் தண்டனையை அனுபவித்துவருகின்றனர்.

தூக்கு தண்டனையை எதிர்த்து நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அனைவரின் மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர் மூவர் உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். ஆனால், அதனையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

நால்வரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி வழக்கின் விசாரணையை வேறொரு நீதிபதிக்கு மாற்றிட உத்தரவிடும்படி பட்டியாலா நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாயார் மனுதாக்கல் செய்தார். பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகளை வேகமாக முடித்துவைக்க தொடங்கப்பட்ட பட்டியாலா நீதிமன்றத்தில் நீதிபதிகள் இல்லாத காரணத்தால், நிர்பயா குறித்த வழக்குகளை வேறொரு நீதிபதிக்கு மாற்றி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜக துணைத் தலைவர் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்!

ABOUT THE AUTHOR

...view details