நாட்டில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டேவருகிறது. டெல்லி மாநிலம் கரோனா வைரசால் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. இச்சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ”மாநிலத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துவரும் நிலையில், மக்களின் ரத்தம் சளி ஆகியவற்றின் மாதிரிகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டுவருகின்றன. நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கக் கூடுதலாகப் படுக்கை வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. தற்போது மாநிலத்தில் குணமடைந்துவருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துவருகிறது. மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 13 ஆயிரத்து 500 படுக்கைகளில் ஏழாயிரத்து 500 படுக்கைகள் காலியாக உள்ளன.