இந்தியாவைக் கரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், நேற்று மாலை பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில், நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் 21 நாள்களுக்கு நாடு முற்றிலும் முடக்கப்படுவதாக அறிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! - டெல்லி லோக் கல்யாண் மார்க்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு லோக் கல்யாண் மார்க் பகுதியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
கரோனா தொற்றைத் தடுக்க, மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்தது. அத்தியாவசியப் பொருட்கள் மருந்துகள் தடையின்றி கிடைக்கும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:கரோனாவைத் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் - ஓ.எஸ். மணியன் வேண்டுகோள்!
TAGGED:
டெல்லி லோக் கல்யாண் மார்க்