நாட்டின் தலைநகர் டெல்லியில் வரும் 8ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு தலைமுறைக்கு மேலாக டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் தங்களது சாதியை டெல்லி அரசின் சாதிப்பட்டியலில் இணைத்து அதன்மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் சுமார் பத்து லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக நான்கு லட்சம் பேருக்கு டெல்லியில் வாக்குரிமை உள்ளது. கரோல் பாக், ராமகிருஷ்ணபுரம், திரிலோக்புரி, இந்திரபுரி, மயூர் விஹார், ஜானக்புரி, ரோஹினி உள்ளிட்டவை டெல்லியின் தமிழ் பிரதேசங்கள் என்று சொல்கிற அளவுக்கு தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
இந்த வாக்குகளைக் குறிவைத்து பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளுமே தங்களது தமிழ்நாட்டுத் தலைவர்களை டெல்லியில் களமிறக்கியுள்ளது.
தமிழர்கள் வாக்கு
பாஜக தென்னிந்திய அணி சார்பில் தமிழர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. கரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது நெருக்கடியான பணிகளுக்கிடையே இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழர்களிடையே பேசியதன் மூலம் டெல்லி தமிழர்களின் வாக்குகளை பாஜக எந்த அளவுக்கு குறிவைக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
பாஜக குறி
இக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்தத் தலைவர்கள் சிபி ராதாகிருஷ்ணன், பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் எஸ்.வி. சேகர், ராதாரவி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். காங்கிரஸ் தரப்பில் எம்எல்ஏ விஜயதரணி, மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர் விரைவில் டெல்லிக்கு வந்து தமிழர்கள் பகுதியில் வாக்கு வேட்டை நடத்தவுள்ளனர்.
மக்கள் மனநிலை
இந்தச் சூழலில் வரவிருக்கின்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளவிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு விசிட் அடித்தது.
சாதி சான்றிதழ்
கடந்த காலங்களில் பொருளீட்டி அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே கடும் பிரயத்தனமாக இருந்த நிலையில், தற்போதுதான் கல்வி பற்றிய விழிப்புணர்வு வந்துள்ளது. பலர் கல்லூரிகளுக்குச் சென்று படித்தாலும், அவர்களுக்கென்று இட ஒதுக்கீடு டெல்லியில் இல்லாததால், வேலைவாய்ப்பினை பெற முடியவில்லை.
எம்ஜிஆர் ரசிகர்
திரிலோக்புரி பகுதியில் முழுக்க முழுக்க விருத்தாசலம், சின்னாளப்பட்டி, திண்டுக்கல், காரைக்குடி ஆகிய ஊர்களைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் 2000-த்துக்கும் அதிகமாக வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பகுதியில் உணவகம் நடத்திவரும் எஸ். பாப்பாத்தி (45) என்பவர் கூறும்போது, டெல்லி அரசு குடிநீர், மின்சாரக் கட்டணத்தின் மீது வழங்கிவரும் சலுகைகளை தொடர்ந்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்றார்.
விருப்பம்
அதற்கு காரணம் எம்ஜிஆர் டெல்லியில் இருந்தாலும், எம்ஜிஆர், இரட்டை இலை பொறித்த படங்கள் எனது கடையில் இடம்பெற்றிருக்கும். ஆனால் கட்சியின் நிலை இப்போது வேறாகிவிட்டது” என்று கூறியவர் டெல்லி அரசியலுக்குத் திரும்பினார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸுக்கும் மத்திய பட்ஜெட்டுக்கும் இப்படி ஒரு தொடர்பா?