தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் பதவியில் நீடிக்க வேண்டும் - ஸ்டாலின் வேண்டுகொள்! - மக்களவைத் தேர்தல்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் ராகுல் காந்தி நீடிக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Delhi Pradesh Congress Committee statement about rahul resignation

By

Published : May 28, 2019, 9:05 PM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

ராகுலின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் சமாதானம் செய்த போதிலும், தான் ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக ராகுல் காந்தி இருப்பதாகத் தகவல் வெளியானது.

இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அப்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் நீங்கள் நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலினுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details