டெல்லியில் லோதி காலனியிலிருந்த காரில் பெண் காவலர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். அதில், இப்பெண்ணின் கணவர் மனோஜ் சிறப்புப் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றுவது தெரியவந்தது. அவரை தொடர்புகொள்ள முடியாமல் காவல் துறையினர் தவித்துவந்த நிலையில், மனோஜ் தனது சொந்த கிராமத்தில் தனது தூப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து துணை காவல் ஆணையர் அதுல் குமார் தாக்கூர் கூறுகையில், " கொலை செய்யப்பட்ட பெண் காவலருக்கும் கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். பெண் காவலரின் உடல் கிடைத்த தினத்தன்று அவரின் கணவர் நண்பனிடம் எமர்ஜென்சி கார் வேண்டும் என அதிகாலையில் வாங்கிச்சென்றுள்ளார். அதே காரில்தான் பெண் காவலரின் உடல் இருந்தது.