தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

டெல்லி: நெகிழி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி தொழிற்சாலையில் தீடிர் தீ விபத்து

By

Published : Apr 7, 2019, 1:15 PM IST

வட டெல்லி பகுதியில் நரேலா நெகிழி தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது. அந்தத் தொழிற்சாலை கட்டடத்தில் இன்று அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறைந்த நேரத்தில் விரைந்து பரவிய தீயின் வேகத்தைக் கட்டுப்படுத்த, 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.இதுவரை விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும்
தொழிற்சாலையில் தீ விபத்தின் காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் மத்திய டெல்லியில் தனியார் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், அங்கு வசித்துவந்த சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details