டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்குமாறு மின்னஞ்சல் அனுப்பிய நபரை டெல்லி காவல் துறையினர் கடந்த சில நாட்களாகத் தேடி வந்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்தவர் கைது! - அரவிந்த் கெஜ்ரிவாலை அச்சுறுத்தும் விதமாக மின்னஞ்சல் அனுப்பிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை
டெல்லி: முதலைமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அச்சுறுத்தும் விதமாக மின்னஞ்சல் அனுப்பிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த அந்த நபர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'மின்னஞ்சல் அனுப்பிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன் அவர் மிரட்டும் விதமாக பலபேருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இணையதளத்திலிருந்த முதலமைச்சரின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி அவருக்கு மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்’ என்று தெரிவித்தனர்.