தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் அதிகரிக்கும் கட்டுப்பாட்டு மண்டலங்கள்!

டெல்லி: மாநிலத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 417ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

delhi-number-of-covid-19-containment-zones-now-417-nearly-2-dot-45-lakh-people-screened-so-far
delhi-number-of-covid-19-containment-zones-now-417-nearly-2-dot-45-lakh-people-screened-so-far

By

Published : Jun 28, 2020, 4:50 PM IST

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மறுவடிவமைப்பு செய்வதற்கு முன்னர், நகரத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 280ஆக இருந்தது என்று அலுவலர் ஒருவர் தெரிவித்தார். தற்போது 417ஆக அதிகரித்திருக்கிறது.

"நகரம் முழுவதும் வீடு வீடாக நடத்தப்படும் கணக்கெடுப்பில் இரண்டு லட்சம் பேருக்குக் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் 45 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டையும் திரையிடும் செயல்முறை ஜூலை ஆறாம் தேதிக்குள் முடிக்கப்படும்” என்றும் அந்த அலுவலர் தெரிவித்தார்.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, டெல்லியில் 34.35 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தன. இதில் நகர்ப்புறங்களில் 33.56 லட்சமும், கிராமப்புறங்களில் 79,574 குடும்பங்களும் உள்ளன.

ABOUT THE AUTHOR

...view details