முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்குத் தொகுதி மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர்,
லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜாலிடம் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் பெயரினை யமுனா விளையாட்டு வளாகத்திற்கு சூட்டப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜேட்லிக்காக கவுதம் கம்பீர் விடுத்த கோரிக்கை...! - கவுதம் கம்பீர் செய்திகள்
டெல்லி கிழக்குத் தொகுதி மக்களவை உறுப்பினர் கவுதம் கம்பீர் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் பெயரினை யமுனா விளையாட்டு வளாகத்திற்கு சூட்ட கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆகஸ்ட் 24ஆம் தேதி கவுதம் கம்பீர் அனில் பைஜாலிற்கு எழுதிய கடிதத்தில், ’உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டிற்கு செய்த பல சிறப்பான நடவடிக்கைகளை பாராட்டும் வகையிலும் கிரிக்கெட்டில் அவர் கொண்டிருந்த அளவுகடந்த ஆர்வத்தை அங்கிகரிக்கும் வகையிலும் எனது தொகுதியில் உள்ள யமுனா விளையாட்டு வளாகத்திற்கு அவரது பெயரினை மாற்றம் செய்யும் எனது எண்ணத்திற்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கடித்தை எழுதுகிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.