டெல்லி:ஊரடங்கால் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் 1,200 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.
நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் முதலீட்டாளர்களுக்கான தொகையைச் செலுத்த முடியாமல் தவித்து வருவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சரக்குகள் செல்லும் பாதையை சீராக கணிக்க, பெட்டிகளில் ஆர்.எஃப் அடையாள குறிச்சொற்கள்!
இந்த மெட்ரோ சேவைக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. அதனை 30 ஆண்டுகளில் செலுத்திமுடிக்க வேண்டும். ஆனால், தின வருவாயாக 10 கோடி ரூபாய் ஈட்டிவந்த டெல்லி மெட்ரோ கரோனா பரவலால் செயல்படாமல் இருப்பதால் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது.
இந்தக் கரோனா சூழலிலும் ஆயிரம் ஊழியர்களுக்கு டெல்லி மெட்ரோ நிர்வாகம் மாத ஊதியம் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.