தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவினர் மூவருக்கு கோவிட்-19 - சீல் வைக்கப்பட்டது கட்சி அலுவலகம்! - பாஜகவினர் மூவருக்கு கரோனா

டெல்லி : பாஜகவினர் மூவருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவினர் மூவருக்கு கோவிட்-19 - சீல் வைக்கப்பட்டது கட்சி அலுவலகம்!
பாஜகவினர் மூவருக்கு கோவிட்-19 - சீல் வைக்கப்பட்டது கட்சி அலுவலகம்!

By

Published : Jun 18, 2020, 7:33 PM IST

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தங்கி பணியாற்றிவந்த பாஜகவினர் மூவருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாநகர சுகாதாரப் பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, பண்டிட் பந்த் மார்க்கில் இயங்கிவரும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான முகக் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை இன்று (ஜூன் 18) விநியோகிக்க திட்டமிட்டிருந்த பாஜக, அதை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இத்தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் முழு அலுவலக வளாகமும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சுத்திகரிப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ், சமூகப் பரவலை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை டெல்லியில் 27 ஆயிரத்து 741 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 904 பேர் உயிரிழந்தும் உள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை அதிகாரப்பூர்மான தகவலை வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details