டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 844 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை 473 பேர் உயிரிழந்தனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு மக்களிடையே அதிகரிப்பதற்கு ஆம் ஆத்மி அரசுதான் காரணம் என பாஜகவின் டெல்லி தலைவர் மனோஜ் திவாரி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லி ராஜ்காட் பகுதியில் ஆம் ஆத்மி அரசைக் கண்டித்து பாஜகவின் டெல்லி தலைவர் மனோஜ் திவாரி, மாநில பொதுச்செயலாளர் குல்ஜித் சிங் சஹால், செய்தித்தொடர்பாளர் அசோக் கோயல் உள்ளிட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விதிகளை மீறிய டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கைது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசிடம் அனுமதி வாங்காமல் பொது இடங்களில் கூடுவது சட்டப்படி குற்றமாகும். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி உள்பட பலரையும் டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்பாக ஊரடங்கு விதிகளை மீறி டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, கிரிக்கெட் விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.