டெல்லி உத்தம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி, வயிற்று வழி காரணமாகச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சையளித்த பின்னர், அவரிடம் 6 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, தனக்கு நான்கு மணி நேரம் மட்டுமே சிகிச்சையளித்ததாகவும் இதற்கு இவ்வளவு தொகை கொடுக்கமுடியாது எனக் கூறியுள்ளார்.
இதனால், சிறுமியை மருத்துவமனை அலுவலர்கள் பணயக் கைதியாக அமரவைத்துள்ளனர். இதையடுத்து, அந்தச் சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தைக் கூறி, 'தன்னை பணயக் கைதியாக அமர வைத்துள்ளதாகவும், தனக்கு உதவி செய்யுங்கள்’ என காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பின்னர், இதனையறிந்து மருத்துவமனைக்கு வந்த வழக்கறிஞர் அசோக் அகர்வால் சிறுமியை வெளியேற்றுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, 1000 ரூபாய் மட்டும் மருத்துவமனையில் செலுத்திய பின்னர், இரவு அந்தச் சிறுமி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.