உலகையே மிரட்டிவரும் கரோனா தற்போது இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோய் கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது.
இந்த நிலையில், டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கரோனா அறிகுறிகளுடன் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு அவருக்கு காய்ச்சல், மூச்சுக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லியில் 42.8 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைுயும் படிங்க : மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!