தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜினாமாவைத் திரும்பப் பெற்ற விமானி - பணிநிலை குறித்து பதிலளிக்காத ஏர் இந்தியா ?! - ஏர் இந்தியா நிறுவன மூத்த விமானி

டெல்லி : பணி ராஜினாமாவைத் திரும்பப்பெற்ற மூத்த விமானியின் தற்போதைய பணிநிலை தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடத்திடம் டெல்லி உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

ராஜினாமாவை திரும்பப் பெற்ற விமானி - பணிநிலை குறித்து பதிலளிக்காத ஏர் இந்தியா ?!
ராஜினாமாவை திரும்பப் பெற்ற விமானி - பணிநிலை குறித்து பதிலளிக்காத ஏர் இந்தியா ?!

By

Published : Jul 17, 2020, 1:32 AM IST

ராஜினாமா முடிவை திரும்பப் பெற்ற ஏர் இந்தியா நிறுவனத்தில் மூத்த விமானி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானியாகவும், மூத்த கட்டளையாளராகவும் பணியாற்றி வந்துள்ளேன். இந்நிலையில், அந்நிறுவனம் எனக்கு தரவேண்டிய சில கொடுப்பனவுகள் மற்றும் நிலுவைத் தொகைகளை முறையாக வழங்காதக் காரணத்தால், பணியிலிருந்து விலக முடிவெடுத்தேன்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி எனது ராஜினாமா கடிதத்தையும் அந்நிறுவனத்திடம் ஒப்படைத்தேன். இந்த முடிவை இறுதி செய்ய எனக்கு சிவில் ஏவியேஷன் வேலைத் தேவையின் (சிஏஆர்) கீழ் ஆறு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு, வந்தே பாரத் மிஷன் சேவை விமான ஓட்டுநராக பங்கேற்று பணியாற்றி வந்த நான் எனது ராஜினாமா முடிவை கைவிட்டு, கடந்த மார்ச் 19ஆம் தேதி அன்று அதனை திரும்பப்பெற்றேன்.

பதவி விலகலை திரும்பப் பெற்று பல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், முன்னர் வழங்கப்பட்ட என் பணிநிலை தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம் இன்றுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. ஆகஸ்ட் 8 ஆம் தேதியுடன் என் பதவி விலகல் கடிதத்தைத் திரும்பப் பெற எனக்கு கால அவகாசம் நிறைவடைகிறது என்பதால், ராஜினாமாவை திரும்பப் பெற்ற என் விண்ணப்பம் மீதான ஏர் இந்தியா நிறுவனத்தின் நிலைப்பாட்டை உடனடியாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று(ஜூலை 16) ஏற்றுக் கொண்டது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதெ மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஷங்கர் ராஜு, நிலன்ஷ் கௌர் ஆகியோர் ராஜினாமாவைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவும், மனுதாரருக்கு தொடர்ந்து பணிகளை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த விமான நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சஞ்சீவ் சென், அவர் அளித்த ராஜினாமாவை திரும்பப் பெற்ற மனுதாரரின் கோரிக்கையின் பேரில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி ஜோதி சிங், மனுதாரரின் ராஜினாமாவைத் திரும்பப் பெறும் முடிவு தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டை உரிய ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details