டெல்லியை சேர்ந்த வழக்குரைஞர் அனுராக் சௌகான், மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில், “கரோனா சுகாதார நெருக்கடி, நாடு தழுவிய பொதுஅடைப்பு காரணமாக பாலியல் தொழிலாளர்கள் மற்றும் தன்பால் ஈர்ப்பாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
அவர்களுக்கு பொருளாதார உதவி, உணவு, பாதுகாப்பு, மருந்துகள் கொடுக்க வேண்டும். மேலும், “தொற்றுநோய் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் தனியாக ஒரு உதவி எண் (ஹெல்ப்லைனை) அமைக்க வேண்டும். பாலியல் தொழிலாளர்களை மறுவாழ்வு செய்ய ஒரு குழுவையும் அமைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.