தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் - அரவிந்த் கெஜ்ரிவால் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

தலைநகர் டெல்லியில் காற்று மாசு சிக்கலுக்கு தீர்வு காண மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Kejriwal
Kejriwal

By

Published : Feb 4, 2021, 3:07 PM IST

தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்றுமாசு சிக்கல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக, பனிக்காலத்தில் இதன் தாக்கம் கடுமையாகக் காணப்படுகிறது. இதற்கு தீர்வு காண அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக டெல்லியில் அரவிந்த் கெஜிரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மாற்று நாள்களில் ஒற்றை, இரட்டை இலக்க எண்களை பயன்படுத்த உத்தரவிட்டது. இதன்மூலம் வாகனங்கள் வெளியேற்றும் காற்று மாசுவை குறைக்க அரசு முயற்சித்தது.

இந்நிலையில், முன்னணி வாகன உற்பத்தியாளர்களிடம் டெல்லி அரசு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பின் அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 40 விழுக்காடு காற்று மாசு ஏற்படுகிறது. எனவே, டெல்லியில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

குறிப்பாக, இளைஞர்கள் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இவர்களை ஊக்குவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் டெல்லி அரசு மேற்கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:போராடும் விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற தமிழ்நாடு எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details