தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி: நாடாளுமன்ற கட்டடத்தில் திடீர் தீ விபத்து! - நாடாளுமன்ற கட்டித்தில் தீ விபத்து

டெல்லி: நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

delhi-fire-breaks-out-at-parliament
delhi-fire-breaks-out-at-parliament

By

Published : Aug 17, 2020, 10:36 AM IST

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இன்று (ஆக.17) காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் முதல்கட்ட விசாரணையில், "காலை 7.30 மணியளவில் நடந்த இந்த தீ விபத்து, மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம்.

உடனே தகவல் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இந்த தீ விபத்தினால் சில மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:கர்நாடகா பேருந்து தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details