தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி தீ விபத்து - 43 பேர் உயிரிழக்கக் காரணமான கட்டட  உரிமையாளர் கைது!

டெல்லி: தொழிற்சாலை தீ விபத்திற்குக் காரணமான கட்டடத்தின் உரிமையாளர் ரோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Delhi fire Accident
Delhi fire Accident

By

Published : Dec 8, 2019, 6:40 PM IST

டெல்லி ஜான்சிராணி சாலையில் உள்ள தொழிற்சாலையில் இன்று அதிகாலை 5.22 மணிக்கு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்தத் தீ விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, இந்து ராவ் மருத்துவமனை ஆகியவற்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர், உள்துறை அமைச்சர், டெல்லி முதமைச்சர், ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விசாரணையில் அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது 304 சட்டப்பிரிவின் கீழ், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விபத்தில் 43 பேர் உயிரிழக்க முக்கியக் காரணமான கட்டடத்தின் உரிமையாளர் ரேஹான் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லியில் பயங்கர தீ விபத்து: 43 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details