டெல்லி மாநிலம், பக்தாவார்புர் கிராமத்தில் பாப்பான்கெஹ்லாட் என்பவர், பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் பணிபுரியும் 48 தொழிலாளிகள் பிகாரைச் சேர்ந்தவர்கள். இதில் சில தொழிலாளிகள் ஊரடங்கிற்கு முன்னதாக, ஊருக்குச் சென்ற நிலையில், சிலர் பண்ணையில் இருந்தனர்.
பண்ணையில் இருந்த தொழிலாளிகளுக்கு கெஹ்லாட் தான் உணவளித்து, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து வந்தார். இந்நிலையில் உள்நாட்டு விமான சேவைகள் இயங்கத் தொடங்கியதையடுத்து, தன்னிடம் பணிபுரிந்த பிகார் தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல டெல்லி முதல் பாட்னாவுக்கு (பிகார்) விமானத்தில் முன்பதிவு செய்ய முடிவு செய்தார்.
இது குறித்து கெஹ்லோட், 'என் தொழிலாளர்களை சகோதர்கள் போலத்தான் நினைக்கிறேன். ஷிராமிக் சிறப்பு ரயில்களில் செல்வோருக்கு நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன. ரயில்கள் வரும் நேரம் தாமதமாகிறது. குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பேருந்துகளில் அனுப்புவதற்கும் தயக்கமாக இருக்கிறது. குடிபெயர் தொழிலாளர்கள் விபத்தில் சிக்குவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.