டெல்லி மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய்க்கு இன்று (நவ.26) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்ட கோபால் ராய், ஆரம்பக் கட்ட அறிகுறிகளின் அடிப்படையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கரோனா
டெல்லி: சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய்க்கு இன்று (நவ.26) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
delhi
தொடர்ந்து கடந்த சில நாள்களாக அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள அப்பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கத்தில் மூன்றாவதாக கரோனாபாதிப்பு ஏற்பட்ட அமைச்சர், கோபால் ராய். முன்னதாக, துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.