தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைநகர் யாருக்கு? - ஆம் ஆத்மி வெற்றிமுகம்! - டெல்லி சட்டப்பேரவை தேர்தல்

டெல்லி: 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்  வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆம் ஆத்மி பல்வேறு இடங்களில் முன்னிலையில் உள்ளது.

delhi election result today
delhi election result today

By

Published : Feb 11, 2020, 8:03 AM IST

Updated : Feb 11, 2020, 12:20 PM IST

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது.

சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இருப்பினும், தேர்தல் வாக்குப்பதிவு நிலவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் அதிக காலம் எடுத்துக்கொண்டது என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி கட்சி பல்வேறு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதையும் படிங்க: சிஏஏ போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் டெல்லி தேர்தல் முடிவுகள்!

Last Updated : Feb 11, 2020, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details