தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராபர்ட் வதோரா வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி - money laundering case

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபரும், பிரியங்கா காந்தியின் கணவனுமான ராபர்ட் வதோரா மருத்துவக் காரணங்களுக்கு வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

vadra

By

Published : Jun 3, 2019, 2:06 PM IST

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிக்கியுள்ள உத்தரப் பிரதேச கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர் வதோரா, மருத்துவ காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததது. விசாரணையின்போது, ராபர்ட் வதோரா அளித்திருந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுவர ஆறு வாரங்கள் அனுமதி அளித்துள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில் அவர் மீதான 'லுக் அவுட்' நோட்டீஸ்கள் தற்காலிகமாக விலக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, லண்டன் செல்வதற்காக வதோரா அளித்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details