தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை: அரவிந்த் கெஜ்ரிவால்

கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

delhi-conducts-20000-covid-19-tests-kejriwal-says-will-be-increased-in-coming-days
delhi-conducts-20000-covid-19-tests-kejriwal-says-will-be-increased-in-coming-days

By

Published : Jun 19, 2020, 3:51 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 573 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகமாக்குவது மட்டுமே ஒரே தீர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கரோனா பரிசோதனையை அதிகரிக்க முயன்றுவருகின்றன.

இந்நிலையில் டெல்லி அரசு சார்பாக நேற்று மட்டும் 20 ஆயிரம் பேருக்கு மேலாக கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே ஒரே நாளில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டுள்ள மாநிலமாக டெல்லி திகழ்கிறது.

இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள டெல்லி மக்களுக்கு இனி எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. வரும் நாள்களில் இந்த பரிசோதனை எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும்'' என பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 அயிரத்து 973 பேராக உள்ளது. இதுவரை ஆயிரத்து 969 பேர் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details