கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் கரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கித்தவித்துவருகின்றன. பெருந்தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் உலகிலுள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் திணறிவருகின்றனர்.
இருப்பினும், நோயாளிகளைக் குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறை அளிக்கப்பட்டுவருகிறது. குணமடைந்த நோயாளிகளின் ரத்தத்திலிருந்து கரோனா ஆன்டிபாடிகளை பிரித்து எடுத்து அவற்றை நோயாளிகளின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது. இதனிடையே, இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பிளாஸ்மா தானத்தை மேற்கொள்ளும்படி குணமடைந்த நோயாளிகளிடம் மருத்துவமனை ஆலோசனை வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "தானம் செய்ய முன்வருபவர்கள் 1031 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 88000 07722 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யலாம்.