வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்.ஆர்.சி) தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் சுமார் 41 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது அதற்கான இறுதிபட்டியல் இன்று வெளியானது.
வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்களில், லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி நபர்களின் பெயர்கள் மட்டுமே கூடுதல் வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தன. பெயர் விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்கக்கோரி மறு விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.