தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விலங்குகள் நல அமைச்சகத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி! - டெல்லி தற்போதைய செய்திகள்

டெல்லி: கிரிஷி பவனில் உள்ள விலங்குகள் நல அமைச்சகத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விலங்குகள் நல அமைச்சகத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி!
விலங்குகள் நல அமைச்சகத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி!

By

Published : May 18, 2020, 4:32 PM IST

தலைநகர் டெல்லியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கிரிஷி பவனில் அமைந்துள்ள விலங்குகள் நல அமைச்சகத்திலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

ஆகையால், அடுத்த 48 மணி நேரம் அமைச்சகம் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, விலங்குகள் நல அமைச்சகத்துக்கு பாஜக தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமை வகிக்கிறார்.

சுகாதார அமைச்சக தகவல்களின்படி, டெல்லியில் கரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 333ஆக உள்ளது.

இதையும் படிங்க:’வம்சம்’ பட காமெடிபோல் செல்ஃபோன் சிக்னலுக்காக மரம் ஏறிய மாணவர் - ஆன்லைன் வகுப்புகள் அட்ராசிட்டி!

ABOUT THE AUTHOR

...view details