இன்றைய நவீன காலத்தில் மக்களின் தேவைக்கேற்ப இருசக்கர, கார் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதேபோல், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இவ்வாறு வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப்புகை காற்றில் கலந்து காற்று மாசடைந்துள்ளது.
குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பெரிதும் முயன்று வந்தன.
இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து வெகுவாக குறைந்ததோடு, அதிக அளவிலான நச்சுப்புகையை வெளியேற்றி வந்த தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.