இந்திய பிராந்திய நீர் நிலைகள், மண்டலங்களில் ஆராய்ச்சி, கணக்கெடுப்பு, ஆய்வு தொடர்பான மின் திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கு தடையில்லா சான்றிதழ்களை (NOC) வழங்குவதற்கான இணையதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
இந்த சான்றிதழ்களை வழங்கும் ஆன்லைன் தளமானது விரைந்து செயல்படும்படியும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஏற்கனவே, வான்வழி நடவடிக்கைகளுக்கு NOC வழங்க வலைதளம் ஒன்று உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.